ஜூலை 19 முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வு – பிரதமர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

ஜூலை 19 முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வு – பிரதமர் அறிவிப்பு!

ஜூலை 19 முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வு – பிரதமர் அறிவிப்பு!

 

 


இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸின் 2 ஆம் அலை பாதிப்பால் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில்
, வரும் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
 
ஊரடங்கு தளர்வுகள்
 
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகமெங்கும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 2, 3 ஆம் அலையாக மாறி இந்தியா, இங்கிலாந்து உட்பட ஒவ்வொரு நாட்டிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா 2 ஆம் அலை பரவலால் பாதிப்படைந்த இங்கிலாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் 30 ஆயிரம் என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிமித்தமாக கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்த இங்கிலாந்து அரசு ஜூன் 21 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்தது. எனினும் எதிர்பாராத விதமாக மீண்டும் பெருகி வந்த நோய் பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், வரும் 19 ஆம் தேதி முதல் அனைத்து பொதுமுடக்க கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட உள்ளது.
 
அதே நேரத்தில் டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதால் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது ஆபத்து என இங்கிலாந்து அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "ஜூலை 19 முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வு – பிரதமர் அறிவிப்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel