
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் இருப்பதால் உரிய
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும். ஏனெனில்
மாணவர்களின் நலன் மிக முக்கியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா
சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்க அறிவுரை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை
ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு
உயர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் அலையை
விட இரண்டாம் அலை இந்தியாவில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. மருத்துவர்கள், காவல்துறையினர்
மற்றும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் களப்பணியாளர்கள் தொடர்ந்து இரவு, பகல் பாராது பரவலை
குறைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அனைத்து மாநிலங்களும் முதல் நடவடிக்கையாக மாணவர்களின்
நலன் கருதி கடந்த வருடம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது
வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன்
மூலம் நடைபெற்று வருகிறது. தேர்வுகளையும் பள்ளி நிர்வாகம் ஆன்லைன் மூலம் நடத்தி
மதிப்பெண்களை வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் கல்வியில் மாணவர்களின் கற்றல் அடைவு
நிலை பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் தங்கள்
குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும்
கவலையில் உள்ளனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தடுப்பூசி
பயன்பாட்டால் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும்
திறக்கும் நடவடிகையில் மாநில கல்வித்துறை இறங்கியுள்ளது. உரிய பாதுகாப்பு
ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி
சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா சமூக பரவல் நோய் என்பதால்
முன்னெச்சரிக்கை பணிகளை சரியாக செய்ய வேண்டும், மாணவர்களின் நலன்
மிக முக்கியம். இதனை கருத்தில் கொண்டு தடுப்பு பணிகளை செய்து உறுதிப்படுத்திய
பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
0 Response to "பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் – WHO தலைமை விஞ்ஞானி! "
Post a Comment