தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் இன்று 12
ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்
பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர்
கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் ஜனவரி மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் வகுப்புகள் தொடங்கப்பட்டு 2மாதங்களில் மீண்டும்
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியது. அதன் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வாட்ஸ்ஆப்
மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. முழு கல்வியாண்டும் நேரடி வகுப்புகள்
தொடங்காத காரணத்தால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது
குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள
அனைத்து 12ஆம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் தங்களது மதிப்பெண் குறித்த விவரங்களை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
dge.tn.gov.in, dge2.tn.nic.inஎன்ற இணையதளங்களில்
தெரிந்து கொள்ளலாம். வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 1,656
மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதிய 100 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி
என்ற அடிப்படையில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 551 முதல் 599
மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 30,600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
600க்கு 600 மதிப்பெண்களை எந்த மாணவரும் எடுக்கவில்லை எனவும் 11ம் வகுப்பில்
அரியர் வைத்த 33 ஆயிரத்து 557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெளியிடப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம்
எனவும், 10ம் வகுப்பு
மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வெளியிடப்படும் எனவும், மதிபெண்ணில்
திருப்தியில்லாத மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரொனோ சூழலை
பொருத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
வருகிற 22 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post
0 Response to "தமிழகத்தில் +2 பொது தேர்வில் 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை – அமைச்சர் அறிவிப்பு"
0 Response to "தமிழகத்தில் +2 பொது தேர்வில் 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை – அமைச்சர் அறிவிப்பு"
Post a Comment