பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு

Trending

Breaking News
Loading...

பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு

பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு
 
 

பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும்
, முதல்-அமைச்சரின் உத்தரவுக்காக கல்வித்துறை காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 
கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்ததன் காரணமாக, மாணவ-மாணவிகளின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் அவசியம் என்பதால், அவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து, சில பரிந்துரைகளை முதல்-அமைச்சரிடம் கொண்டு சென்றது. அதில் மாணவர்கள் பாதிக்கப்படாதவகையில் மதிப்பெண் முறையை தேர்வு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
 
எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு

இந்த உத்தரவின்படி, அரசு தேர்வுத்துறை பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் தயாரிக்கும் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. இந்த மாதம் இறுதிக்குள் மதிப்பெண் முடிவுகளை அறிவிக்க இருக்கிறது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் என்று பேசப்படும் நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் 99.99 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும், முதல்-அமைச்சரின் உத்தரவுக்காக அரசு தேர்வுத்துறையும், கல்வித்துறையும் காத்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் பார்க்கும்போது, பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 Response to "பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel