
கொரோனா தொற்றின்
காரணமாக தனது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க
இருப்பதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான பல அறிவிப்புகளும்
வெளியிடப்பட்டுள்ளது.
மாத
உதவித்தொகை:
நாடு
முழுவதும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் மக்களை உலுக்கி வருகிறது. நாளுக்கு நாள்
தொற்றின் பாதிப்பும், அதனால் ஏற்படும்
இழப்புகளும் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில
அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களிலும் பல கட்ட
ஊரடங்குகள் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளை தடுக்க
முடியவில்லை.
இதனால் பல மாநில அரசுகளும் கொரோனா தொற்றினால்
உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இதுவரை 8,25,000 க்கும் மேற்பட்டவர்கள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில், 10,076 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று
மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்த
குழந்தைகள் மாநிலத்தில் 776 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு இந்த மாத
தொடக்கத்தில் இருந்து பால் சேவ யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால்
பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு முகியா மந்திரி பால் சேவ யோஜனா
திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.2,000 உதவி தொகை வழங்கும்
திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், 21 வயது வரை மாதம் ரூ.4,000 உதவித்தொகையும், 21 வயதிற்கு மேல் அவர்களின்
உயர்படிப்பிற்காக 24 வயது வரை மாதம் ரூ.6,000ம் உதவித்தொகை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2,000 – குஜராத் அரசு அறிவிப்பு!"
Post a Comment