தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளைப் பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் புரோக்கர்கள் வசூலிப்பது குறித்து தமிழக அரசு அதிர்ச்சி

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ரூ.500, ரூ.1,000 – அரசு அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும்
புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் புரோக்கர்கள்
வசூலிப்பது குறித்து தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்த புகார்களை
அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
ரேஷன் கார்டுகள்:
தமிழகம்
முழுவதும் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் அரசு வழக்கும் அனைத்து நலத்திட்டங்களும்
மற்றும் சிறப்பு திட்டங்களும் ரேஷன் அட்டைகளின் மூலமாகவே வழங்கப்படுகிறது. மேலும், அரசு மாதம் தோறும் மக்களுக்கு உணவு பொருட்களை மலிவு விலையிலும், அரசி, கோதுமை போன்றவற்றை
இலவசமாகவும் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் பல சாதாரண நிலை மக்கள்
பலனடைந்து வருகின்றனர். அதிலும், அரசு பல திட்டங்களின்
அடிப்படையில் உதவித்தொகையும் வழங்கி வருகிறது.
இதனால் இவ்வளவு நாட்களாக ரேஷன் அட்டை இல்லாதவர்கள் கூட
புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். அப்படி, 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் புதிய குடும்ப
அட்டை வாங்க விண்ணப்பித்துள்ளனர். தற்போது அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களையும்
ஆன்லைன் முறையில் பெறுவதற்கு பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்
மக்கள் அரசு அலுவலகங்களுக்கு தேவை இல்லாமல் அலையாமல் தேவையான ஆவணங்களை எளிமையாக
பெற்றுக் கொள்ளலாம்.
இப்படி நவீன அம்சங்கள் உள்ள நிலையில், பலர் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுத்தருவதாக கூறி ரூ.500 மற்றும் ரூ.1,000 பொதுமக்களிடம் வசூலிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதேபோல், ரேஷன் கார்டு வழங்க விசாரணைக்கு வருவது போல் புரோக்கர்கள் மற்றும் அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பணம் கேட்டால் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Response to "தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளைப் பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் புரோக்கர்கள் வசூலிப்பது குறித்து தமிழக அரசு அதிர்ச்சி"
Post a Comment