21.07.2021 - முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

21.07.2021 - முக்கிய செய்திகள்

21.07.2021  - முக்கிய செய்திகள்


*1️
🔷🔶பொறியியல் படிப்புக்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் திரு பொன்முடி தெரிவித்துள்ளார்.*
 
 
   *2️🔷🔶மொபைல் கோபுரம் அமைப்பதாக கூறி பணமோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.*
 
 
   *3️🔷🔶அதிமுக உடன் கூட்டணி தொடர்வதாக பாஜக மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.*
 
*தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் திரு அண்ணாமலை சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.*
 
 
   *4️🔷🔶பிரதமர் திரு நரேந்திர மோடி தமது அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அமைச்சர்களை அறிமுகம் செய்து பேசியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.*
 
 
   *5️🔷🔶டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி மகளிர் அணி தங்களது முதல் நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.*
 
 
   *6️🔷🔶மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.*
 
 
   *7️🔷🔶ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் புகழ்மிக்க கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காணொலி வெளியிட்டுள்ளார்*
*@ianuragthakur*
 
 
   *8️🔷🔶கர்நாடக மாநில ஆளுநராக பதவி ஏற்றதை தொடர்ந்து, திரு தாவர்சந்த் கேலோட், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.*
 
   *9️🔷🔶வண்டலூர், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற ராகவிக்கு ரூ 10,000 பரிசு தொகையை காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சி. சைலேந்திர பாபு வழங்கி கௌரவித்தார்.*
 
 
   *1️0️🔷🔶தமிழ்நாடு பிஜேபி*
 *தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, திரு அண்ணாமலை*
, *தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை*
 *சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.*
 
 
   *1️1️🔷🔶தமிழ்நாடு பிஜேபி*
 *தலைவராக பொறுப்பேற்ற தொடர்ந்து, திரு அண்ணாமலை*
, *கட்சி பிரமுகர்களான திரு பொன்.ராதாகிருஷ்ணன்*
, *திரு எச்.ராஜா*
*திருமதி வானதி சீனிவாசன்*
 *ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.*
 
 
   *1️2️🔷🔶கோவிட் நிலவரம் தொடர்பாக, நாளை மாலை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று பல்வேறு கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர்களிடம் தெரிவித்திருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்*.
 
 
   *1️3️🔷🔶சூரத் உட்பட தெற்கு குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.*
 
 
   *1️4️🔷🔶பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர் தொடர்ந்து 70 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கிறது.*
 
 
   *1️5️🔷🔶மாநிலங்களின் கையிருப்பில் 2.60கோடிகரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது*
 
 
   *1️6️🔷🔶பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி*
 
 
 *1️7️🔷🔶மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்து 52,553 புள்ளிகளாக வீழ்ச்சி*
 
 
   *1️8️🔷🔶இந்திய சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டேவின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசு துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு வாழ்த்து செய்தி விடுத்துள்ளார்.*
 
 
   *1️9️🔷🔶நாடுமுழுவதும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விபரம்*
 
*குணமடைந்தோர்-3,03,08,456*
*பாதிக்கப்பட்டோர்-* *4,21,665*
*உயிரிழப்பு-4,14,108*
 
 
*மாபெரும் தலைவர்கள் வழியில் சின்னம்மா!: கிருஷ்ணகிரியில் சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!*
 
    *கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் மாபெரும் தலைவர்கள் வழியில் சின்னம்மா உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் படங்களுடன் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது*
 
 
   *எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடக்கம்*
 
 
   *சென்னை: பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இறைவன் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்றும் உலகுக்கு பறைசாற்றும் நாள் என் அவர்கள் தெரிவித்துள்ளனர்.*
 
   *சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிஃபன்ஸ் காலனியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பத்ரி நாராயணன் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.*
 
 
 
   *சென்னை: நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அளித்துள்ளனர். டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.*
 
 
   *புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,823-ஆக அதிகரித்துள்ளது.*
 
 
 
   *கடலூர்: கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுநகர் கள்ளசெட்டி தெருவைச் சேர்ந்த தேவராஜ்-கிரிஜா தம்பதியர் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடப்பட்டுள்ளது.*
 
 
   *தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான 4,900 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர்.*
 
   *சென்னை: ரூ.4,250 கோடி முதலீட்டில் 9 தொழில் திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். தொழில் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*
 
 
   *டெல்லி: இலங்கை சிறையிலுள்ள ராமேஸ்வரம் கைதியை தமிழகம் கொண்டுவர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் 2 போலீசாரை பாதுகாப்பிற்காக அனுப்புவது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.*
 
 
 
*🔵 இந்தியாவில் 125 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,093.*
 
     _டெல்லி: இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,093 என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது._
 
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
 
*🎯மயிலாடுதுறை:* சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 11-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி அருகே பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடியை சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
 
 
*🎯சென்னையில்* ஐசிஐசிஐ வங்கி முகவரிடம் நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துச் சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்பேரில் ஆள்வின்ஞானதுரை என்பவரிடம் அதிக கமிஷன் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துள்ளனர். அசன் காதர், பாலன், வேலாயுதம் ஆகியோரை கைது செய்த போலீஸ் ரூ.12.40 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்
 
 
*🎯கடலூர்* முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுநகர் கள்ளசெட்டி தெருவைச் சேர்ந்த தேவராஜ்-கிரிஜா தம்பதியை வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடப்பட்டுள்ளது.
 
 
*🎯தூத்துக்குடி:* இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான 4,900 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர்.
 
 
*🎯கோவை மாவட்டம்* போத்தனூர், குனியமுத்தூரில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவை போத்தனூர் பகுதியில் போதை ஊசி கும்பலைச் செர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
*🎯மதுரை:* கிடைமாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் அரசு அலுவலகங்களாக கட்டடங்களாக மாறி வருவதால் பல்லுயிர் பெருக்கம் அழிவதுடன் மண்வளம் குறைவதற்கும் வழிவகுக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
 
 
*🎯நாகை* வேதாரண்யம் பகுதியில் முல்லைப் பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால், உரிய விலை கிடைக்கவில்லை எனவிவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
*🎯நீலகிரி* ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
 
 
*🎯சென்னையில்* சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வன்கொடுமை செய்ததாக இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கணேஷ் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பலமுறை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் தெரிவித்துள்ளார். அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய விசாரணைக்கு ஆஜராக கிளம்பியபோது பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
 
*🎯சென்னை* நந்தம்பாக்கம் டிஃபன்ஸ் காலனியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பத்ரி நாராயணன் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.
 
 
 (20-7-2021) சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!*
 
  தமிழகம் - 1,904
 
  மொத்த பாதிப்பு - 25,39,277
 
  குணமடைந்தவர்கள் - 2,439
 
  கோவை - 209
 
  சேலம் - 133
 
  சென்னை - 141
 
  உயிரிழந்தவர்கள் - 30
 
 
*🔷🔶தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை*
 
    *கேரளத்தில் மேலும் ஒருவருக்கு ஜிகா பாதிப்பு*
 
*கேரளத்தில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்*
 
 
   *மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,910 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*
 
*இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,29,596 ஆக உயர்ந்துள்ளது.*
 
*மேலும் 7,510 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 60,00,911 பேர் குணமடைந்துள்ளனர்.*
 
*கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,30,753 ஆக உயர்ந்துள்ளது.*
 
*இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 94,593 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
 
   *கேரளத்தில் புதிதாக 16,848 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.*
 
*கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளது. புதிதாக 16,848 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,87,716 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 10 சதவிகிதமாக இருந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 12 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது.*
 
*மேலும் 104 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 12,052 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 30,45,310 பேர் குணமடைந்துள்ளனர்*.
 
*இன்றைய நிலவரப்படி 1,26,398 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
*புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 783 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.*
 
*கடந்த 24 மணி நேரத்தில் 1,41,431 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.91 சதவிகிதம்.*
 
 
   *தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 30 பேர் உயிரிழந்தனர்.*
 
*இது தொடர்பாக செவ்வாய்க் கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது*.
 
*இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,39,277-ஆக அதிகரித்துள்ளது.*
 
 
*🔷🔶தஞ்சை:* முனியம்பட்டி சாய்பாபா நகரில் உள்ள கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 1,500 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கிடங்கிலிருந்து 2,000 சாக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்
 
 
*🔷🔶கள்ளக்குறிச்சி*
 விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகளில் கொள்ளையடித்த காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் அருகே கைது செய்யப்பட்ட காமராஜிடம் இருந்து 75 சவரன் நகைகள், 2 கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
*🔷🔶விருதுநகர்*
சிவகாசியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான பான்பராக், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பான்பராக் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பதுக்கி விற்றது தொடர்பாக திருமேனி நகர் அமல்ராஜ், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
*🔷🔶சென்னை* அருகே போரூர் ஏரியில் சுமார் 7,000 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. போரூர் ஏரியில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர் குப்பை இடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. போரூர் ஏரியில் மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
 
 
*🔷🔶திருவாரூர்*
பேரளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியார், மருமகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
 
 *🔷🔶நாகப்பட்டினம்:*
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி நாகையில் மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
 
 
*🔷🔶சிவகங்கை*
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
 
 
*🔷🔶புதுக்கோட்டை மாவட்டம்* கறம்பக்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், 25 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
*🔷🔶தேனி மாவட்டம்*
 தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்
 
 
*🔷🔶புதுவை* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 24 மணி நேரம் இடைவிடாது திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்வு புதுச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் துவங்கியது.
 
      
*🔷🔶கோவை:* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கோவிட் தொற்று தடுப்பூசி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 
 
*🔷🔶இராணிப்பேட்டை*
அரக்கோணத்தில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் கம்பெனி பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
 
 
*🔷🔶சென்னை* நங்கநல்லூர் ஜயப்ப நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதர் வீட்டில் இருந்து 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
 
*🔷🔶சென்னை* அண்ணாநகரில் திருநங்கை காவலர் சுபாஸ்ரீயிடம் அத்துமீறியதாக காவலர் உட்பட 2 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கை காவலர் சுபாஸ்ரீயிடம் தகாதமுறையில் நடந்ததாக குற்றப்பிரிவு காவலர் கணேசன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
 
*🔷🔶தேனி மாவட்டம்* ஆண்டிப்பட்டி அருகே
கூட்டுறவு கடன் சங்கத்தில்
ரூ.16.50 லட்சம் கையாடல்
கூட்டுறவு செயலாளர் கைது.

0 Response to "21.07.2021 - முக்கிய செய்திகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel