
புதுக்கோட்டை மாவட்ட
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தற்காலிக மருத்துவம் சாரா
பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக
பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா
காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை
இழந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாமல், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் பலியான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளது. இருந்த போதிலும் செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு
ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு
சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மருத்துவம் சாரா பணியிடங்களான
மருந்தாளுனர் 10, நுண்கதிர்
வீச்சாளர் 10, ஆய்வக
நுட்புதர் 10 ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு 2 ஆண்டுகள் முடித்தவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் முற்றிலும் ஆறு மாத
கால தற்காலிக பணி ஆகும். இந்த பணியிடங்களை வரும் காலத்தில் பணிவரன் முறை
செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யவோ வாய்ப்பில்லை. மேலும் இந்த பணியிடங்களுக்கு
மாதம் ரூ.12000 ஊதியம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் இணை
இயக்குனர், மருத்துவம், மற்றும் ஊரக நலப்பணிகள் பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
வளாகம், சாந்தநாதபுரம்
1 ஆம் வீதி, புதுக்கோட்டை
622001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி நாள் ஆகும். மேலும் ஜூலை 31 நேர்முகத்
தேர்வு நடைபெறும்.
0 Response to "தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!"
Post a Comment