தமிழகத்தில் 2,408 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – 2024 வரை நீட்டிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் 2,408 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – 2024 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் 2,408 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – 2024 வரை நீட்டிப்பு!


தமிழகத்தில் நியமிக்கப்பட்ட
2,408 தற்காலிக ஆசிரியர்களது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகள் அதாவது 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காலத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு இந்த பணி நீட்டிப்பு பேருதவியாக உள்ளது.

ஆசிரியர் பணி நீட்டிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது. இந்த நிலையில் 2011-2012ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 2,408 அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 344 பேர் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆவர். அனைத்து பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி தடையின்றி கற்பிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் தற்காலிக ஆசிரியர் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அரசு மேலும் மூன்றாண்டுகளுக்கு அவர்களின் பணியை நீட்டித்தது. நீடிக்கப்பட்ட பணி இந்த வருடம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 பிப்ரவரி மாதம் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு தங்களுக்கு பெரிதும் உதவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதும் அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியது. மேலும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை நாட்களுக்கான ஊதியம் வழங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 Response to "தமிழகத்தில் 2,408 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – 2024 வரை நீட்டிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel