
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல்
உள்ளவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் அரசுப்பணி
வழங்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு பதிவு செய்வது அவசியமாகும்.
இதில் பதிவு செய்தும் ஏராளமானோர் வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு
செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை
கிடைக்காதவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு சார்பாக மாதந்தோறும்
உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 400
ரூபாயும்,
தேர்ச்சி பெறாதவர்
எனில் 200 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400
ரூபாயும்
வழங்கப்படும். மேலும் கல்லூரி இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கு 600
ரூபாய்
வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு
1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற
விரும்புவோரின் குடும்ப வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்ற பிரிவினர்கள் 40
வயதுக்குள்ளும்
இருக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு
கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளம்
மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்களையும்
இணைத்து ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என ஈரோடு
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0 Response to "வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!"
Post a Comment