
ஆஸ்திரேலியாவில்
உருமாறிய டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிட்னியில்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நான்கு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு
தெரிவித்துள்ளது.
ஊரடங்கு
நீட்டிப்பு:
உலகளவில் கொரோனா
இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா
இரண்டாம் அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆசியா மற்றும் ஐரோப்பிய
நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா
அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு
மேலும் நான்கு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு
தெரிவித்துள்ளது.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன்
கூறுகையில், சிட்னியில் டெல்டா வைரஸ் தாக்கம் காரணமாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 26 ஆம் தேதிக்கு முதல் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் பரவல்
அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 177 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த
பகுதிகளில் படித்து வரும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மற்ற பகுதிகளுக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்ட
நிலையில் அவர்களுக்கு வாரம் 74,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் இல்லாமல் இருக்கும் குடும்பத்திற்கு கூடுதல் சமூக
நல உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
0 Response to "ஆகஸ்ட் 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!"
Post a Comment