
தமிழகத்தில்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள போது
அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.
இட
ஒதுக்கீடு வழக்கு:
தமிழகத்தில்
வன்னியர் பிரிவு மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி
வன்னிய சமுதாய மக்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து பல வருடங்களாக போராட்டம் நடத்தி
வந்தனர். இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் வன்னியர்களுக்கான
இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இந்த இட
ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
இது குறித்து உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த
இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து
விசாரிக்கப்பட்டது. அதில் 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தால் விளிம்புநிலை மக்கள்
பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தாண்டு முதல்
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்துகிறதா என்று
நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த இட
ஒதுக்கீட்டு வழக்கை உடனடியாக விசாரிக்க மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதனால்
இன்று மதியம் 2.15 மணிக்கு வழக்கு நீதிபதிகள் முன் அமர்வுக்கு வர உள்ளது. 10.5%
இட ஒதுக்கீட்டை
அமல்படுத்தியது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்
என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வழக்கு நிலுவையில் உள்ள
போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமலானது குறித்து முழு விவரம்
தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "தமிழகத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமல் – உயர் நீதிமன்றம் கேள்வி!"
Post a Comment