மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – அசாம் அரசு முடிவு!

Trending

Breaking News
Loading...

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – அசாம் அரசு முடிவு!

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – அசாம் அரசு முடிவு!


அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி விகிதம்
2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாநில கல்வித் துறை நேற்று அறிவித்தது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகின்றது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவால் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று கல்வி நிறுவனங்களுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 2%க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கும். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தரமான முறையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அசாமில் இன்னும் மூன்று முதல் நான்கு சதவீதம் வரை தொற்று பாதிப்பு விகிதம் உள்ளது.

ஐ.சி.எம்.ஆர் மருத்துவர் டி.ஜி., டாக்டர் பால்ராம் பார்கவா அவர்கள் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆலோசனை வழங்கினார். குழந்தைகள் கொரோனா தொற்றுநோயை சிறப்பாகக் கையாள முடியும் என்று கூறினார். ஆனால் மாநில அரசு மருத்துவரின் ஆலோசனையை ஏற்று குழந்தைகளின் நலனில் சோதனை செய்ய விரும்பவில்லை என்று அறிவித்துள்ளது. லக்கிம்பூர் மற்றும் கோலாகாட் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிக அளவில் உள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறப்பது மீண்டும் ஆபத்தை உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

0 Response to "மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – அசாம் அரசு முடிவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel