தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்டெடுப்பு – குழு அமைப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்டெடுப்பு – குழு அமைப்பு!

தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்டெடுப்பு – குழு அமைப்பு!


தமிழகத்தில் குறு
, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முன்னாள் தொழில்துறைச் செயலாளர் முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீட்டெடுப்பு குழு:

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் பெரும் பாதிப்படைந்தனர். இதன் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியது. இந்த தொழில் நிறுவனங்களால் தமிழகத்தில் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. மேலும் சுய தொழில் செய்யவும் முன் வந்தனர். அதனால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் தொழில்கள் முடக்கப்பட்டது. இந்த கொரோனா பேரிடரால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அரசு மூடிய தொழில் நிறுவனங்களை மீட்கும் முயற்சியாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராயும் வகையிலும் மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முன்னாள் தொழில்துறை செயலாளர் முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர் பேராசிரியர் M.விஜயபாஸ்கர், இந்திய ரிசர்வ் வங்கி உறுப்பினர் பிந்து ஆனந்த், சிறு தொழில்கள் வங்கியின் மேலாண்மை இயக்குனர், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு தலைவர் இஸ்ரார் அஹ்மத், தமிழ்நாடு சிறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத் தலைவர் அன்புராஜன் மற்றும் பலர் உறுப்பினர்களாக உள்ளனர் மேலும் இக்குழுவில் அலுவலர்கள் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 Response to "தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்டெடுப்பு – குழு அமைப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel