
இந்த நிதியாண்டில்
முதல் காலாண்டில் நாட்டில் உள்ள முதல் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
கிட்டத்தட்ட 41,000 பேருக்கு
வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐடி வேலைவாய்ப்பு:
இந்தியாவின் முதல்
மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 9,088 பேருக்கு
வேலைவாய்ப்பினை வழங்கியிருந்த நிலையில், தற்போதைய நிதியாண்டில் முதல் காலாண்டில் 40,887 பேருக்கு புதிதாக
வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்த மாற்றங்களை காணும் போது, அடுத்த சில
மாதங்களில் வேலைவாய்ப்பினை வழங்குவதில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பது
தெரிகிறது.
டி.சி.எஸ் 20,000 க்கும்
மேற்பட்டவர்களையும், இன்போசிஸ் மற்றும் விப்ரோ முறையே 8,000 மற்றும் 12,000 பேரையும் புதிதாக
பணியமர்த்தியது. இன்போசிஸ் சிஓஓ பிரவீன் ராவ் அவர்கள், தொற்று காலம் சீராகி
மீண்டும் தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருவதால் சிறந்த பணியாளர்களுக்கான தேவையும்
அதிகரித்து வருகிறது. முந்தைய காலாண்டில் 10.9% ஆக இருந்த தன்னார்வ
ஊக்கம் கடந்த 12 மாதங்களில் 13.9% ஆக அதிகரித்துள்ளது.
நிறுவனங்கள் புதிதாக லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை
கையெழுத்திட்டுள்ளது.
இதனால் அதிக அளவிலான
பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த ஆண்டில் டிசிஎஸ் 40,000 ஊழியர்களையும், இன்போசிஸ் 35,000 மற்றும்
விப்ரோ 12,000 ஊழியர்களையும்
புதிதாக பணியமர்த்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த போட்டியினால் மூன்று
நிறுவனங்களும் தங்களின் முழு திறனோடு போட்டி போட்டு நிலையை இன்னும் உயர்த்திக்
கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "நாட்டின் 3 முன்னணி IT நிறுவனங்களில் 40,887 பேருக்கு வேலைவாய்ப்பு!"
Post a Comment