தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக ரூ.4000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய
தொகுப்பு இலவசமாக ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்ட நிலையில், அதனை பெற தவறியவர்களுக்கு
இறுதி வாய்ப்பு அளிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ரேஷன்
அட்டைதாரர்கள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல்
முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் வருமானம் இன்றி சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் முக
ஸ்டாலின் அவர்கள் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.4000 நிவாரணம்
(இரண்டு தவணைகளாக) மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை
வழங்கப்படும் என அறிவித்தார். இதில் 2வது தவணை ரூ.2000 மற்றும் மளிகை
பொருட்கள் கடந்த மாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் அச்சம், நோய்த்தொற்று பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் சிலரால் கொரோனா நிவாரண பொருட்களை பெற முடியவில்லை. இதனால் தங்களுக்கு
நிவாரண பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என கோரி இருந்தனர். தற்போது இது தொடர்பாக
தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இதுவரை
தமிழகத்தில் நிவாரணத் தொகை ரூ.4000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு
ஆகியவற்றை பெறாதவர்கள் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்த 3 லட்சம்
பயனாளர்களுக்கு கடந்த மே 10ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள்
அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் வரும் ஆகஸ்ட்
முதல் வாரம் முதல் கடைகளில் வழக்கம் போல பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா
அச்சம் நிலவி வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித
இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Response to "தமிழக அரசின் ரூ.4000, மளிகை பொருட்களை வாங்காதவர்கள் கவனத்திற்கு - இறுதி வாய்ப்பு! "
Post a Comment