SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி?

Trending

Breaking News
Loading...

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி?

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி?


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (
SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் சேதமடைந்த / தொலைந்து போன டெபிட் கார்டை எவ்வாறு பிளாக் செய்வது என்பதற்கான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI வங்கி:

கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் மற்றொருவருடன் நேரடி தொடர்பை தவிர்க்கின்றனர். இதனால் பண பரிவர்த்தனை, ஷாப்பிங் என அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. மறுபுறம் ஆன்லைன் மூலம் பணமோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டை தொலைத்தாலோ அல்லது சேதப்படுத்தினாலோ அதனை எவ்வாறு பிளாக் செய்வது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

·     உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ டயல் செய்யுங்கள்

·         கார்டை பிளாக் செய்வதற்கு ‘0’ ஐ அழுத்தவும்

·  இதற்கு இரண்டு வழிமுறைகள் வழங்கப்படும். முதல் விருப்பத்திற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு எண்ணைப் பயன்படுத்தி 1 ஐ அழுத்த வேண்டும். இரண்டாவது விருப்பத்திற்கு, நீங்கள் 2 ஐ அழுத்தி, பதிவுசெய்த மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தடுக்கும் செயல்முறைக்கு வங்கி அக்கவுண்ட் எண்ணை உள்ளிட வேண்டும்.

·    1 ஐத் தேர்வுசெய்தால், உங்கள் டெபிட் கார்டின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிட வேண்டும் மற்றும் உறுதிப்படுத்த முடிவில் 1 ஐ அழுத்தவும். விருப்பம் 2 க்கு, கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்

·   இதன் முடிவில் உங்கள் டெபிட் கார்டு பிளாக் செய்யப்படும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் SMS அனுப்பப்படும்.

0 Response to "SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி?"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel