
தற்பொழுது நடந்து
வரும் 2021-22 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்
வரையுள்ளதான முதல் காலாண்டில் மத்திய அரசின் நிகர வரி வருவாய் 86%
அதிகரித்துள்ளதாகவும்,
இதனால் பண மதிப்பு
ரூ.5.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வரி வருவாய்
இந்தியாவில் கொரோனா
வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு
உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் பல வகையான சேவைகள் தடைபட்டதுடன்,
அரசு மற்றும்
தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டது. தவிர மத்திய அரசுக்கு அதிகளவு வருவாய்
பெற்றுத் தரும் போக்குவரத்து, சுற்றுலா துறைகள் முழுவதுமாக மூடப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியிலும் கடந்த காலாண்டில் மத்திய அரசின் வரி வருவாய் 86%
உயர்ந்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மக்களவை கூட்டத்தின் போது எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,
‘2021-22 நடப்பு
நிதியாண்டில், நடந்து முடிந்துள்ள ஏப்ரல் முதல் ஜூன் வரையில் உள்ள முதல் காலாண்டில்
மத்திய அரசின் நிகர நேரடி வரி வருவாய் ரூ.2,46,519
கோடியாக
அதிகரித்துள்ளது. இந்த அளவீடுகளை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில்,
இது ரூ.1,17,783
கோடியாக இருந்தது
குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியின் நிமித்தமாக அரசுக்கு ஏறக்குறைய 109.03%
வரி வருவாய்
கிடைத்துள்ளது.
மேலும் முதல் காலாண்டின் நிகர மறைமுக வருவாயை பொருத்தளவு ரூ.3,11,398 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை கணக்கிடுகையில் ரூ.1,82,862 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிகர மறைமுக வருவாய் 70% ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் – ஜூன் மாத முதல் காலாண்டில் வரி வருவாய் வசூல் ரூ.5.57 லட்சம் கோடி அதிகரித்துள்ளது’ என தெரிவித்துள்ளார். இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வரி செலுத்தும் பிரிவுக்குள் சேர்க்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "நடப்பு நிதியாண்டில் நிகர வரி வருவாய் - ரூ.5.57 லட்சம் கோடி, 86% அதிகரிப்பு – மத்திய அரசு தகவல் "
Post a Comment