
கர்நாடக மாநிலத்தின்
புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார். மேலும் மாநிலத்தின் ஆளுநர்
தாவர்சந்த் கெலாட் இன்று அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய முதல்வர்:
இந்தியாவில் 75 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு அரசு பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின்
விதிமுறையை ஏற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவருக்கு வயது 78 ஆகும். இந்த நிலையில் புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்கும் பொருட்டு பாஜகவின் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில்
தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எடியூரப்பா, நளின்குமார், அருண் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த
கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பற்றி கலந்தாலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில்
கூட்டத்தில் உள்ள அனைவரும் ஒரு மனதாக பாஜக சட்டப்பேரவை குழுவின் புதிய தலைவராக
பசவராஜ் பொம்மை அவர்களை தேர்ந்தெடுத்தனர். மேலும் அவர் கர்நாடக மாநிலத்தின் புதிய
முதல்வராகவும் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு பதவி பிரமாணம் செய்து
வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பசவராஜ் பொம்மை மாநிலத்தின் ஆளுநர்
தாவர்சந்த் கெலாட் அவர்களை சந்தித்து பதவி ஏற்க அனுமதி கோரி கடிதம் அளித்தார்.
இதனையடுத்து இன்று
காலை 11 மணிக்கு
கர்நாடகத்தின் 20 ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்
கொண்டார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார். அதன்படி இன்று முதல் 5 ஆண்டுகளுக்கு பசவராஜ் பொம்மை பதவி வகிப்பார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பதவியேற்றுள்ள முதல்வர்
பசவராஜ் பொம்மை மாநிலத்தின் நோய்த்தடுப்பு பணிகளை சிறப்பாக கையாள்வார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை – இன்று பதவியேற்பு!"
Post a Comment