
உத்தரகண்ட்
மாநிலத்தில் பள்ளிகளை மீண்டுமாக திறக்க முடிவு செய்துள்ள அமைச்சரவை, வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பள்ளிகள்
திறப்பு
கொரோனா புதிய
பாதிப்புகளை கவனத்தில் கொண்ட உத்தரகண்ட் மாநில அரசு, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ள
பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு
மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு
முன்னதாக இடைநிலை மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் திறக்க உத்தரகண்ட் அமைச்சரவை
கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை
மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனிடையே
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக
பின்பற்றுமாறு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நேரடி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என்றும், வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள்
பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர வகுப்புகள் நடைபெற்று வரும் போது, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட
அனைவரும் முகக்கவசங்களை அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது மற்றும் வளாகத்தில்
இருக்கும் போது சமூக இடைவெளியை பராமரித்தல் போன்ற வழிமுறைகளை கண்டிப்பாக
பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள்
வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "ஆகஸ்ட் 2 முதல் 6 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – உத்தரகண்ட் மாநில அரசு அறிவிப்பு!"
Post a Comment