தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் தொடக்கி வைப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் தொடக்கி வைப்பு!

தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் தொடக்கி வைப்பு!


தமிழக்த்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைநகர் சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின் கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று அத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. இந்த கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ முகாம்களிலும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் அரசின் நிர்ணயிக்கப்பட்ட தொகை வசூலிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான கருத்துக்களால் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்தனர். பின் அரசின் விழிப்புணர்வுகளாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் காரணமாகவும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக தனியார் மருத்துவமனைகளிலும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முக ஸ்டாலின் அவர்கள் தலைநகர் சென்னை உள்ள தனியார் காவேரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் தனியார் மருத்துவமனை பங்களிப்பு நிதி மூலம் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

0 Response to "தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் தொடக்கி வைப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel