மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
0 Response to "மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்"
Post a Comment