
அரசு மற்றும் தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1
சதவிகிதமாக ஜூலை 1 முதல் செப்டம்பர் வரை தொடரும் என தமிழக
நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு
நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும்
நிறுவனத்தில் இருந்து மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம்
செய்யப்படுகிறது. அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பணத்தை எடுத்து
பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், ஊழியர்களுக்கு இத்தொகை
மிகப்பெரிய சேமிப்பாக உள்ளது.
இந்நிலையில் ஊழியர்கள் தங்களது
ஓய்வுக்காலம் வரை இந்த தொகையை எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு மொத்த தொகைக்கு
வட்டி வழங்கப்படும். தற்போது வட்டி விகிதம் குறித்து நிதித்துறை கூடுதல் தலைமை
செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம்
தேதி வரை ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1
சதவிகிதமாக உள்ளது.
இந்நிலையில் இதே வட்டி விகிதம்
தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை மூன்று
மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாக
தொடரும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார். பொது வருங்கால வைப்பு நிதி
மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற அரசாங்க திட்டத்தால்
நடத்தப்படும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "தமிழகத்தில் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் – அறிவிப்பு வெளியீடு!"
Post a Comment