ஈரோடு தமிழன்பன் எழுதிய தமிழோவியம் என்னும் கவிதைநூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது .இக்கவிதை குறித்துக் கவிஞர்
முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும், புரிந்துகொள்ள அகராதிகள்
தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!. நூலின் தலைப்பாக அமைந்த கவிதை
இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
காலம் பிறக்கும்முன் பிறந்தது
தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும்
தமிழே!....
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!
காலம்பிறக்கும்முன்….
ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் – நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
மானிடமே ன்மையைச் சாதித்திடக் – குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட…
காலம்பிறக்கும்முன்….
எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே…
காலம்பிறக்கும்முன்…
விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்
வீணையில் என்று சொல்வதுபோல்
குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப்
புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!
- ஈரோடுதமிழன்பன்
நூல்வெளி
ஈரோடுதமிழன்பன் ஒருபன்முகப் படைப்பாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை,புதினம்,நாடகம்,சிறார்இலக்கியம் என அத்தனை
வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ,சென்ரியு,லிமரைக்கூ எனப் புதுப்புது
வடிவங்களில் கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதை
நூல்களையும் சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது ‘வணக்கம்வள்ளுவ’ கவிதைநூலுக்கு 2004 ஆம் ஆண்டுக்கான சாகித்திய
அகாதமிவிருது வழங்கப்பட்டது. ’தமிழன்பன் கவிதைகள்’ தமிழகஅரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அ.
படித்துச் சுவைப்போம்.
கருத்துகள் பேசினால் உரைநடை!
கற்பனை பேசினால் கதை!
உணர்ச்சிகள் பேசினால் கவிதை!
ஒப்பனை பேசினால் ஓவியம்!
உண்மை பேசினால் காவியம்!
நளினங்கள் பேசினால் நாட்டியம்!
நடிப்பு பேசினால் நாடகம்!
உயிரின் துடிப்பு பேசினால்
தாயின் மொழி அன்றோ…!
அதுவே தாய்மொழி அன்றோ…!
ஐயிரு திங்கள் குருதிக் குளத்தில் குளித்து
உயிரைத் தந்தவள் தன் உயிர்த்துடிப்பு
அன்னை மொழியாகும்!
ஆ.
கவிதையைத் தொடர்வோம்.
அன்னை சொன்ன மொழி
ஆதியில்
பிறந்த மொழி
இணையத்தில்
இயங்கும் மொழி
ஈடு இணையற்ற
மொழி
உலகம் போற்றும்
மொழி
ஊர்கூடி
வியக்கும் மொழி
……………………………………………………
……………………………………………………
……………………………………………………
……………………………………………………
0 Response to "9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழோவியம் - ஈரோடுதமிழன்பன்"
Post a Comment