மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் நியமனம்

Trending

Breaking News
Loading...

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் நியமனம்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக  மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  நியமனம்

 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக நியமனம் பெற்றிருக்கும் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமிருந்து நியமன ஆணை பெற்றுள்ளார்.   .
 
ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்
 
இப்பொறுப்பிற்கு முன்னாள் அவர் மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநராகவும், பாடநூல் கழக துணை இயக்குநராகவும் புதுகை,கோவை மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தர்ம்புரி மாவட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலராகவும், புலியூர், நாமக்கல் பகுதிகளில் முதுகலை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 
திரு அருள்முருகன் அவர்கள் புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம்,கணினித் தமிழ்சங்கம் ஆகியவற்றின் நிறுவனர்.
புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள், நேமிநாதம் காலத்தின் பிரதி, நதிக்கரையில் தொலைந்த மணல், போன்ற நூல்களின் ஆசிரியர்.
 
மாவட்டக்கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்.
 
தமிழக பாடநூல் தயாரிப்பில் தமிழ்ப்பாட நூல்களுக்கான பாடவல்லுநர் மற்றும் மேலாய்வாளராக பணியாற்றி தரமான பாட நூல்களை உருவாக்குவதில்  பெரும் பங்களிப்பை வழங்கியவர்.
 
இன்னும் பல உயரங்கள் அவருக்காக காத்திருக்கின்றன.
 
 
பலரின் வாழ்த்துகளில் சில
 
சு. சுந்தரராஜன்
தலைமையாசிரியர்
அரசு மேனிலைப்பள்ளி
உக்கல்
 
நெஞ்சுநிறை வாழ்த்துகள் ஐயா... செயலில் தூய்மை..
பேச்சில் இனிமை..
வாழ்வில் எளிமை..
அறிவில் தெளிவு.. 
தேடிவரும் பதவியில்
வலிமையோடும் வாய்மையொடும் 
பணியாற்றுதற்குப் பொருத்தமானவர்..
வாழ்கவென வாழ்த்தி மகிழ்கிறேன்...💐💐💐
 
 
உமா,  தலைமை ஆசிரியர் , கரூர்
 
அன்போடு அருளும் திருவோடு முருகும்
தமிழோடு தென்றலும் சொல்லாய் செயலும் ஒன்றித்து ஒன்றிய பெருந்தகைக்குக் கிடைத்த வெகுமதி சாலப் பொருந்தும். மேன்மேலும் உம்மால் பதவி சிறக்க அன்பின் வாழ்த்தும் வேண்டுதலும் ஐயா🙏😊🌹
 
இரா.வை.இராமநாதன்,  பள்ளித்துணை ஆய்வாளர்,
மாவட்டக் கல்வி அலுவலகம், நாகப்பட்டினம்.

ஐயா, மிக்க மகிழ்ச்சி... தங்களின் கடுமையான உழைப்பு மற்றும் சிறந்த வழிகாட்டுதல் மூலம் பள்ளிக்கல்வித்துறை மென்மேலும் வளர்ச்சி பெறும்... பணிவுடன்...

0 Response to "மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் நியமனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel