
கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியதால் இந்தியாவிற்கு பயணிக்க அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு தடை வைத்திருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலையினால் அதிக பாதிப்புகள் ஏற்பட தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எல்லையை மூட தொடங்கியது. அண்டை நாடுகளுடனான அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்தது. இந்தியாவில், கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால் அமெரிக்க அரசு தங்கள் நாட்டினர் இந்தியாவிற்கு செல்ல தடை விதித்தது.
தற்போது, நோய் பாதிப்புகள் குறைந்து, நிலைமை சரியாகி வருவதால், தற்போதைய நிலைமையை பரிசீலித்து, மீண்டும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அரசு தடி விதித்த சமயத்தில் இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.மருத்துவ உபகாரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் தற்போது நாட்டில் நிலைமை சீரடைந்து, பாதிப்புகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "இந்தியாவிற்கான பயண கட்டுப்பாடுகள் தளர்வு – அமெரிக்க அரசு அறிவிப்பு!! "
Post a Comment