
தமிழகத்தில் தமிழ் வழியில்
படித்தவர்களுக்கு அரசுப்பணிக்கான குரூப் 1
தேர்வில், 20% ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு
தமிழக அரசுப்பள்ளியில்
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு
பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ் வழிக்கல்வியில்
படித்தவர்களுக்கு குரூப் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசுப்பணி தேர்வில் 20%
ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக TNPSC உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனுவில், அரசுப்பணிக்கான குரூப் 1
தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றி அதிகாரிகளை நியமனம் செய்ய
தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தது. இந்த மனு விசாரணையின் போது, கடந்த
2020
ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. இப்போது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்வு முடிவுகளை
மாற்றியமைத்தால் புதிய அதிகாரிகளை நியமிப்பதில் கால தாமதம் ஆகும் என அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஆங்கில வழிக்கல்வி
மூலம் பள்ளி வகுப்புகளை முடித்து, தமிழ் வழியில் பட்டப்படிப்பு
முடித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்வது குறித்த ஆலோசனையை
நீதிபதிகள் முன்னெடுக்கையில், அரசுப்பணியில் அமர்வதற்காக
சிலர், பல்கலைக்கழகங்களில் முறைகேடான வழியில்
சான்றிதல்களை பெற்று பணிக்கு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை
மேற்கொள்ள வேண்டும் என கூறி TNPSC கொடுத்த மனுவை தள்ளுபடி
செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Response to "TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு – நீதிமன்றம் உத்தரவு!"
Post a Comment