
உலக
அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சாலை விபத்துகளில் அதிகம் பேர்
உயிரிழக்கின்றனர் என்றும், நாட்டிலேயே தமிழகத்தில்
தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள்:
அதிகவேகம், தரமற்ற சாலைகள், சாலை விதிமுறைகளைச் முறையாக
பின்பற்றாமல் இருப்பது, மது அருந்திவிட்டு
வாகனங்களை ஓட்டுவது , தரமற்ற வாகனங்கள் போன்ற
காரணங்களினால் பொதுவாக சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனால் பலர் பலியாகும்
நிகழ்வுகள் தொடர்ந்து நம் கண் முன்னே நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த
மூண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகள் மற்றும் அதில்
உயிரிழந்தவர்களின் விவரங்களை குறித்து பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை
அமைச்சகம் புள்ளி விவர அடிப்படையிலான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2017ம் ஆண்டில் 4,64,910 சாலை விபத்துகளும், 2018ம் ஆண்டில் 4,67, 044 விபத்துகளும், 2019ம் ஆண்டில் 4,49,002 விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்
தான் முதலிடத்தில் உள்ளது.
உலக
அளவில் அதிக சாலை விபத்துகள் நாடாகும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான்
முதலிடத்தில் உள்ளது. அங்கு 2018ம் ஆண்டை பொறுத்தவரை 22,11,439 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பான்
இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது
இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் சாலை விபத்துகளால் அதிகம்
உயிரிழப்புகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஒரு லட்சம் பேரில் 11 பேர் உயிரிழக்கின்றனர்
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 Response to "சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம் – மத்திய அரசின் புள்ளிவிவரம்!"
Post a Comment