தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!

 


தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நேரத்தில் தொற்று பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
 
ஆலோசனை கூட்டம்:
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. அதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவல் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
தமிழகத்தில் கொரோனா தடுப்பில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்படுவது பற்றியும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 10.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel