
தமிழகத்தில் ரேஷன்
கடைகளில் புதிய மாற்றம் குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல்
துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ரேஷன் கடைகள்:
தமிழக அரசு சார்பில்
மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு
வருகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 இரண்டு தவணையாக
வழங்கப்பட்டது. மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, பொங்கல் பரிசு, வேஷ்டி, சட்டை உள்ளிட்ட
அனைத்து நலத்திட்டங்களும் பெற ரேஷன் கடைகளை மக்கள் நாடுகின்றனர். இந்நிலையில்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் உணவு பொருள்
வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனை
கூட்டத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
ராமச்சந்திரன்,
வணிக
வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 33,055 ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகள்
5000 உள்ளது. இந்த 5000 கடைகளை பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில்
6,990 நியாயவிலை கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அவை அடுத்த 2
ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில்
ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 1-ஆம் தேதி முதல்
செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் 2,608 நேரடி கொள்முதல்
நிலையங்களில் எந்தவொரு தவறும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன எனவும், மதுரையில் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிசீலனை
செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில்
தரமான பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரேஷன் அரிசியை
வெளிமாநிலங்களுக்கு கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன்
பொருட்களை பாக்கெட் வடிவில் மக்களுக்கு கொடுக்க படிப்படியாக நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
0 Response to "தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – அமைச்சர் அறிவிப்பு!"
Post a Comment