
இந்தியாவில் ஆரம்ப
பள்ளிகள் முதற்கட்டமாக திறப்பு – ஐசிஎம்ஆர் கருத்து!
இந்தியாவில்
பெரியவர்களை போல குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே முதலில்
ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர்
ஜெனரல் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா
வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த வருட மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால்
மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து தேர்வுகளும்
ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பள்ளிகளை திறந்து நேரடி
வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா இராண்டாம்
அலை தீவிரமெடுக்கத் தொடங்கியது. அதனால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.
மற்றொரு புறம் தடுப்பு பணிகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு
பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசிகளால்
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது நம்மை தொற்றிலிருந்து
பாதுகாக்கிறது. அதன் காரணமாக தற்போது பாதிப்புகள் குறைந்து வருகிறது. மேலும்
இந்தியாவில் பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா பள்ளிகள்
திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை
குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. அதனால் வரும் செப்டம்பர் மாதம்
முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்
வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு வகுப்பறை கல்வியை அளிக்க வேண்டும். நாள் முழுவதும்
ஸ்மார்ட்போன்கள் மூலமாக கற்பது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் மாணவர்களின் கல்வி
நிலையை கருத்தில் கொண்டு முதலில் ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் என ஐசிஎம்ஆர்
கூறுகிறது. மேலும் பள்ளிகளில் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்களுக்கும்
தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
0 Response to "முதலில் ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா "
Post a Comment