வயது முதிர்ந்தவர்கள்
ஓய்வூதியம் பெற வழங்கப்டும் ஜீவன் பிரமாணப் பத்திரம் பெற இனி வங்கிகளுக்கு செல்லத்
தேவையில்லை. அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என இந்திய தபால்
துறை தெரிவித்துள்ளது.
ஆனால் தொழில்நுட்பம் பற்றி முன் அனுபவம் இல்லாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இதனால் பெரும் சிரமம் அடைவதால் தற்போது இந்திய தபால்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஓய்வூதியம் பெற வாழ்வு சான்றிதழை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தபால் துறை ட்விட்டரில், “மூத்த குடிமக்கள் இனி அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் இருக்கும் பொதுச்சேவை மையத்தில் எளிதாக ஜீவன் பிரமாணப் பத்திரம் தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளது.
முன்னதாக ஓய்வூதியம்
பெற தேவையான வாழ்வு சான்றிதழை பெற சம்பந்தப்பட்ட ஓய்வூதியர் நேரடியாக வர வேண்டிய
தேவை இருந்தது. இதனால் ஓய்வூதியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இனிமேல் அருகில்
உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று வாழ்வு சான்றிதழ் பெறலாம். இதனால் வயதான
காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அலைச்சல் குறைவாக இருக்கும்.
0 Response to "ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தபால் அலுவலகங்களில் பெறலாம்! "
Post a Comment