தமிழக அரசின் ‘சி.பா.ஆதித்தனார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசின் ‘சி.பா.ஆதித்தனார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் ‘சி.பா.ஆதித்தனார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

 


தமிழில் வெளியிடப்படும் தினசரி
, வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களுக்கு வழங்கப்படும் சி.பா.ஆதித்தனார் விருது நடப்பாண்டில் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் அறிவிப்பு:
தமிழ்நாட்டின் இதழியல் முன்னோடியான சி. பா. ஆதித்தனார் அவர்கள் தமிழ் மொழிக்காக பல முயற்சிகளையும் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை பத்திரிகைத் துறை வழியாக வெளிப்படுத்தினர். தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சிறப்பிக்கும் வகையில் இவரது பெயரில் சிறந்த நாளிதழ், வார இதழ் மற்றும் மாத இதழ்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது.
 
ஆண்டு தோறும் இந்த பிரிவுகளில் சிறந்த பத்திரிகைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்வளர்ச்சி துறை விருதுகளை வழங்கி வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாகவும், கேடயமும், பொன்னாடையும் வழங்கப்படும். 2021ம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் விருது வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
 
இதற்கான விண்ணப்பத்தினை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்துடன் நாளிதழ், வார இதழ், மாத இதழ் இவற்றை தொடங்கியதற்கான ஆண்டு, செய்துள்ள பணிகள், சாதனைகள், தற்போதைய பணி, முன்னர் பெற்ற பாராட்டுக்கள் போன்றவற்றை பற்றிய விவரங்களையும் தமிழ்வளர்ச்சித்துறையின் அலுவலகத்திற்கு ஜூலை 30ம் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.
 
முகவரி:
தமிழ் வளர்ச்சி இயக்குனர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை- 600 008.
 
தொலைபேசி எண்: 044 28190412, 044 28190413.

0 Response to "தமிழக அரசின் ‘சி.பா.ஆதித்தனார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel