
இந்தியாவில்
தூய்மை பணியாளர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க அரசுக்கு கோரிக்கை
வைக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
பணியாளர்களுக்கு
பாரத ரத்னா
இந்தியாவில்
கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர் இவர்களின் பங்கு
இன்றியமையாததாகும். இவர்களை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் பங்கு
போற்றத்தக்கதாகும். மக்கள் அனைவரும் தொற்று அச்சத்தால் வீடுகளில் முடங்கினர். அரசு
மக்கள் யாரும் வீதிகளில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தியது. இந்த இக்கட்டான
காலத்தில் நாட்டை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர் . தன்
நலம் கருதாது இரவு பகல் பாராது உழைத்தனர். சகிப்புத் தன்மையுடன் கழிவுகளை
அகற்றினர்.
இவர்களை
அரசு முன்கள பணியாளர்களாக அறிவித்து சலுகைகளையும் வழங்கி வருகிறது. மேலும்
இவர்களின் பணி அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து இடைவெளி இன்றி நடைபெற்று வருகிறது.
இவர்களை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் அரசு நல திட்டங்களை
அறிவித்து வருகிறது. சம்பள உயர்வு நிரந்தர பணி போன்றவைகளை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தூய்மைப் பணியாளர் என்று அழைக்கப்படுகின்ற முன்கள
பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என
தூய்மைப் பணியாளரின் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்
பணியாளர்களான மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஏற்கனவே பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து கடுமையாக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கும்
அவர்களின் பணியை பாராட்டி பாரத ரத்னா விருதுக்கு கோரிக்கை வைக்கப்படும் என தேசிய
தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில்
கூறியுள்ளார்.
0 Response to "தூய்மை பணியாளர்களுக்கு பாரத ரத்னா விருது – அரசுக்கு கோரிக்கை! "
Post a Comment