
தமிழகத்தில்
ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, 2 லட்சம் ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ரேஷன் கார்டுகள் வரும் திங்கள் முதல்
வழங்கப்படும் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன்
கார்டுகள்:
தமிழகத்தில் 1.96
கோடி மக்கள் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். ரேஷன் கடைகளில் மக்கள் மலிவான விலையில்
பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. அவற்றில்
முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற
தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்
போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு
மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் கொரோனா
நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இரு
தவணைகளாக நிவாரண தொகை வழங்கப்பட்டது. குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1000
உதவித்தொகை அறிவிப்பு வெளியானது முதல், தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகள் பெற
விண்ணப்பித்து உள்ளனர். உணவு வழங்கல் துறை அதிகாரிகள் சரிபார்த்து ரேஷன் கார்டுகள்
வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி
மாதம் முதல் இம்மாதம் வரை ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் இதுவரை 2
லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சம் ரேஷன்
கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அச்சிடப்பட்ட புதிய
ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் திங்கள் முதல் வழங்கப்படும் என உணவு
வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
0 Response to "தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பணிகள் தீவிரம்!"
Post a Comment