தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்கள்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்கள்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்கள்!


தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை பள்ளிக் கல்வித்துறை துவங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கணக்கம்பாளையம் நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அலுவலர் பார்வையிட்டார்.


 மீண்டும் பள்ளிகள் திறப்பு?


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களால் ஸ்மார்ட் போன்கள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை. எனவே இவர்களின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அரசு, கல்வித் தொலைக்காட்சியை உருவாக்கி அதன் மூலம் மாணவர்கள் கல்வி பெற உதவி வருகிறது. இந்த கல்வித் தொலைக்காட்சி வாயிலாக அரசு பள்ளி மாணவர்களும் இடைவிடாது கற்றலை தொடர்கின்றனர்.


தற்போது 2021-22 ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகள் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களும் பள்ளிகள் திறப்பு பற்றி கலந்தாலோசித்து வருகிறது. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


அதனை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை பள்ளிக் கல்வித்துறை துவக்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கணக்கம்பாளையம் நகராட்சி பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அலுவலர் பார்வையிட்டார். இந்த ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடன் கற்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

0 Response to "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்கள்! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel