
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களின் நலன்
கருதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்கள்
குறைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள
அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
மட்டுமே நடத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்த காரணத்தால்
மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு
பாடசுமையை குறைப்பதற்காக கடந்த ஆண்டு பொதுத்தேர்விற்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம்
பாடத்திட்டங்களை 30% குறைத்து.
ஆனால் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் அனைத்தும்
ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மாற்று முறையில்
மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது 2021-2022ம் கல்வியாண்டு
தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் நீடித்து வருவதால் தற்போதும் நேரடி
வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன்
வகுப்புகள் நடக்கிறது. இந்நிலையில்,
சிபிஎஸ்இ கல்வி
வாரியம் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகளை இரண்டு பருவங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திலும், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில்
நடக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது, சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடப்பாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இரண்டு பருவத்திற்கும் பாடத்திட்டம் மற்றும்
மதிப்பெண்கள் 50 சதவீதமாக பிரிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த
விவரங்களை www.cbseacademic.nic.in
என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "CBSE 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டங்கள் குறைப்பு!"
Post a Comment