
பாரிஸ்: கோவிட்தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து
வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.
இதனால் மக்கள் வழக்கம்போல பொது இடங்களுக்குச் செல்லத்
துவங்கிவிட்டனர். இந்தியாவில் உருவாக்கிய டெல்டா ரக வைரஸ், துவக்கத்தில்
கிழக்காசிய நாடுகளை மட்டுமே அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது உலகின் பல நாடுகளில்
டெல்டா அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வைரஸ் இன்னும் எவ்வாறெல்லாம் உருமாறும் என்று உலகம்
முழுக்க விஞ்ஞானிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது
பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான குழுமத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் இதுகுறித்து
பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் வரும்
குளிர்காலத்தில் கொரோனா புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது உள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா, அல்லது மிதமான
பாதிப்பு உடையதா என இன்னும் சரியாகத் தெரியவில்லை எனக் கூறிய அவர் விரைவில்
அதற்கான முடிவை தங்கள் குழு அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.உலகம் வரவிருக்கும்
ஆண்டுகளில் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாடுகள்
தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகள் என்னும் நிலைதான் எனக் கூறியுள்ளார்.
பிரான்சில் இன்னும் முழுமையாக ஊரடங்குக் கட்டுப்பாடுகள்
நீக்கப்படாத நிலையில் இவற்றை நீக்கலாமா, வேண்டாமா என்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின்
கீழ் அவை திட்டமிட்டுவருகிறது. மேலவையின் ஒப்புதலுக்காக இந்த அவை காத்திருப்பது
குறிப்பிடத்தக்கது..
0 Response to "வரும் குளிர்காலத்தில் கோவிட்டின் புதிய ரகம்- பிரஞ்சு விஞ்ஞானி தகவல் "
Post a Comment