மத்திய அமைச்சரவையின் சிறப்பு; கெத்து காட்டும் பெண் அமைச்சர்கள்!

Trending

Breaking News
Loading...

மத்திய அமைச்சரவையின் சிறப்பு; கெத்து காட்டும் பெண் அமைச்சர்கள்!

மத்திய அமைச்சரவையின் சிறப்பு; கெத்து காட்டும் பெண் அமைச்சர்கள்!

 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டு உள்ளது. நேற்று பதவியேற்றுக் கொண்ட
43 பேரில் 36 பேர் புதுமுகங்கள். 7 இணையமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பல இளம் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணையமைச்சர்களாக சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகிய நான்கு பெண் அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏழு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,
 
 
 
மீனாட்சி லேக்கி
 
பாஜகவை சேர்ந்த இவர் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர். எல்.எல்.பி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். முன்னதாக டெல்லி மாநகராட்சி உறுப்பினராக இருந்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவர், சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர்.
 
ஷோபா கரன்ட்லாஜே
 
பாஜகவை சேர்ந்த இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். எம்.ஏ படித்துள்ளார். முன்னதாக மாநில உணவு, கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்துள்ளார். உடுப்பி தொகுதி மக்களவை எம்.பியாக இருக்கிறார். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர்.
 
அனுப்பிரியா சிங் படேல்
 
அப்னா தள் கட்சியை சேர்ந்த இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அமிதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார்.

0 Response to "மத்திய அமைச்சரவையின் சிறப்பு; கெத்து காட்டும் பெண் அமைச்சர்கள்! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel