வைப்பு நிதிக்கான (FD) சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் – முழு விவரங்கள்

Trending

Breaking News
Loading...

வைப்பு நிதிக்கான (FD) சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் – முழு விவரங்கள்

வைப்பு நிதிக்கான (FD) சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் – முழு விவரங்கள்


மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டமான நிலையான வைப்பு நிதி கணக்கிற்கு ஒவ்வொரு
வங்கியும் வேறு வேறு விகிதங்களில் வட்டி வழங்கி வரும் நிலையில்
, அவற்றில் சிறந்தது எது என்பதை பற்றி இந்த பதிவில் காப்போம்.
 
வைப்பு நிதி:
இந்தியாவில், நிலையான வைப்பு பணத்தை சேமிப்பதற்கான மிகவும் பிரபலனமான வழிகளில் ஒன்றாக உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் பயனர்களுக்கு நல்ல வருமானத்தையும் வழங்குகின்றது. வைப்பு நிதி கணக்கில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பணம் வங்கியில் சேமிக்கப்படுகிறது. வைப்பு காலத்தின் முடிவில் நாம் முதலீடு செய்த தொகையுடன் அதற்கான கூட்டு வட்டியும் கிடைக்கும். வைப்பு நிதிக்கான கணக்கு தொடங்கும் போது ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றது.
 
ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடக்கம் – இலங்கை அரசு அறிவிப்பு!
 
நாம் வைப்பு நிதி கணக்கை முடிவை செய்வதை பொறுத்து அந்த வட்டி விகிதம் மாறுபடும். பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வைப்பு நிதி கணக்கிற்கு குறைவான வட்டி விகிதங்களை வழங்குகின்றது. ஆனால் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
 
வட்டி விகிதங்கள்:
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி:
 
உஜ்ஜிவன் வங்கி வாடிக்கையாளர்களின் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி வழங்குகிறது.
 
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி:
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி ஒரு வருட FD கணக்குகளுக்கு 6.5% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
 
சூர்யோதே சிறு நிதி வங்கி:
சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.50% வட்டி வழங்குகிறது.
 
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
இந்த வங்கியில் ஒரு வருட நிலையான வைப்பு தொகை கணக்குகளுக்கு ஆண்டுக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.
 
ஜனா சிறு நிதி வங்கி
ஜனா சிறு நிதி வங்கியில் ஒரு வருட FD கணக்குகளுக்கு 6.25%, மூத்த குடிமக்கள்- 6.75% வட்டி வழங்கப்படுகிறது.
 
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி
இந்த வங்கியில் ஒரு வருட ரெகுலர் FD கணக்குகளுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி வழங்கப்படுகிறது.

0 Response to "வைப்பு நிதிக்கான (FD) சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் – முழு விவரங்கள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel