தேசிய கல்வி
நிறுவனத்தின் திறந்தநிலை பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு விண்ணப்ப பதிவு
இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி இதற்கு கடைசி நாளாகும்.
திறந்தநிலை
பள்ளி:
தேசிய
திறந்தநிலை கல்வி நிறுவனம், இந்திய அரசின் கீழ்
செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும். இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரக
பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை எளிமையான
வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த
திறந்தநிலை பள்ளி வாரியம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை
ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்கு பிறகு தொழிற்கல்வி
படிப்புகளை வழங்குகிறது.
தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான
கடந்த கல்வியாண்டின் தேர்வு முடிவுகளை கடந்த ஜூலை 23ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த தேர்வின் முடிவுகளை
மாணவர்கள் nios.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம். இந்நிலையில் ஜூலை 27ம் தேதியான இன்று முதல்
தேசிய திறந்தநிலை பள்ளிகளில் 2021, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. NIOS பொதுத் தேர்வுகள் 2021 பதிவுக்கான கடைசி தேதி 2021 ஆகஸ்ட் 16 ஆகும்.
இந்த தகவலை NIOS தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஜூலை 26 அன்று வெளியிட்டுள்ளது. NIOS 10,
12ம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் அக்டோபர் – நவம்பர் இல் நடத்தப்படும். ஆனால் தேர்வுக்கான
முழுமையான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை ஒரு பாடத்திற்கு தாமத கட்டணமாக ரூ.100ம், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை அனைத்து
பாடங்களுக்கும் தாமத கட்டணம் ரூ.1500 ம் வசூலிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "NIOS 10, 12ம் வகுப்பு தேர்வு விண்ணப்ப பதிவு – இன்று முதல் தொடக்கம்!"
Post a Comment