தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!

Trending

Breaking News
Loading...

தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!

தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!

 

 


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட்
3 ம் தேதிக்குள் (03.08.2021) உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
 
இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை:
 
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் கல்வியில் இட ஒதுக்கீட்டை வழங்கி தொடர்ந்து அவர்கள் கற்க ஊக்குவிக்கிறது. மேலும் கல்வி உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க அரசு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 முதல் 8ம் தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
 
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் (03.08.2021) உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
 
இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை:
 
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் கல்வியில் இட ஒதுக்கீட்டை வழங்கி தொடர்ந்து அவர்கள் கற்க ஊக்குவிக்கிறது. மேலும் கல்வி உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க அரசு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச கல்வியை பெறுகின்றனர்.
 
இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் வரும் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் போது குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், இருப்பிடச் சான்று, வயது சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் நபர் தேர்ந்தெடுக்கும் பள்ளி அவரின் வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். குழந்தையின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள் எனில் அதற்கான உரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் வட்டார வள மையங்கள், மதுரை, மேலூர், திருமங்கலம் பகுதிகளின் மாவட்ட கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறும் எனவும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Response to "தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel