தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆகஸ்ட்
1 முதல் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
மாணவர் சேர்க்கை:
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் எதிர்கால நலன் கருதி ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
 
இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என அவர் கூறியுள்ளார்.

0 Response to "தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel