
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை
சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 நாட்களில் 13,000-க்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2021-22 கல்வியாண்டு கடந்த ஜூன் 14 முதல்
தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு அடிப்படை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் உள்ள அனைத்து சிறுபான்மையின தனியார்
பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 நாட்களில் தமிழகத்தில் உள்ள
8,442 தனியார் பள்ளிகளில் உள்ள 1.25 லட்சம் இடங்களுக்கு 13000 க்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு
நேரடியாக விண்ணப்ப பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக
ஆன்லைன் மூலமாக விண்ணப்பதிவு நடத்தப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரி
சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்ட் 3 ஆம் தேதி கடைசி நாள்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 86,362 பேர் விண்ணப்பித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
0 Response to "தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச கல்வி – குவியும் விண்ணப்பங்கள்!"
Post a Comment