
மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்ய EMIS இணையத்தில் பதிவு
செய்ய வேண்டிய விவரங்கள் - DEE Instructions
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08.2021 நிலவரப்படி ஊராட்சி / நகராட்சி
மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8 வகுப்புகள் வரை
உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்துவகை ஆசிரியர்கள் மாணவர்கள்
பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில்
இக்கல்வியாண்டிற்கான ( 2021-22 ) ஊராட்சி நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்துவகை
ஆசிரியர்கள் மாணவர்கள் பணியிட நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல்
முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது. எனவே , இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( EMIS
) இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த
கீழ்க்குறிப்பிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* தொடக்க கல்வி
இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து ஊராட்சி / நகராட்சி
மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி
மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class wise ) மற்றும் தமிழ் வழி ஆங்கில
வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
* இரு மொழி , மும்மொழி என
சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு தனியாக விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
* 2381 அங்கன்வாடி
மையங்களுக்கு LKG , UKG விகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் / பணியிடங்களையும்
பூர்த்தி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு ஊராட்சி
நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அரசால்
அனுமதிக்கப்பட்ட ( Sanctioned Post
details ) | அனைத்துவகை ஆசிரியர்கள் பணியிடங்களின்
விவரங்களை பள்ளியின் அளவைப் பதிவேட்டின்படி ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து
பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
* அவ்வாறு பதிவேற்றம்
செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக்
கண்டறியப்பட்டு ( Surplus post without
person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண்
செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட
பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஊராட்சி / நகராட்சி
/ மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும்
அனைத்துவகை ஆசிரியர்கள் சார்பான முழு விவரங்களையும் ( Teacher Profile ) எவருடைய பெயரும்
விடுபடாமல் ( EMIS ) இணையதளத்தில் உரிய கலங்களில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
0 Response to "01.08.2021 நிலவரப்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். "
Post a Comment