செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Trending

Breaking News
Loading...

செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தில் புதிய வாகனகங்கள் அனைத்திற்கும்
5 ஆண்டுகளுக்கு கட்டாய காப்பீடு வழங்கி, அவை வாகன உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பயணி அனைவரையும் உள்ளடக்கியவாறு இருக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன காப்பீடு

பொதுவாக மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கும் காப்பீடு என்பது அவசியமானதாகும். அதாவது வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவினாலும், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட மற்ற காரியங்கள் நிமித்தமாக வாகனங்கள் பாதிப்படைந்தால் அந்த சேதங்களை சரி செய்ய வாகனத்தின் மீதான காப்பீடுகள் தேவைப்படும். இந்நிலையில் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு கால காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்த ஒருவரது குடும்பத்துக்கு ரூ.14,65,000 இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நியூ இந்திய அஷுரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், வாகன ஓட்டுநர் என்ற அடிப்படையில் வாகனத்துக்கு காப்பீட்டு எடுத்துள்ளதாகவும், இறந்த நபர் வாகனத்தை ஒட்டவில்லை என்பதால், ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடு தர முடியும் என தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தார். பின்னர், புதிய வாகனத்தை வாங்குபவர்கள் அதற்கான காப்பீடுகளை குறித்து முறையாக தெரிந்து கொள்வதில்லை என கூறிய அவர், இனி வரும் காலங்களில் புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற முறையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு கட்டாய காப்பீடு வழங்க வேண்டும். மேலும் வாகன காப்பீடுகள் அதன் உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என கூறி தமிழக போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 Response to "செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel