தமிழகத்தில் தொழிற் படிப்புகளில் சேர்வதற்கு அரசு பள்ளி மாணவ
மாணவிகளுக்கு 7.5%
இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதன்
காரணமாக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை
குறைந்து வருகிறது. தற்போது நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு
தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை
சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் இருந்தே விவகாரம்
விஸ்வரூபம் எடுத்தது.
இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு
பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இட
ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்து சட்டம் இயற்றியது
குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் 2020-2021 ஆம் கல்வியாண்டில்
அரசு பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பிற்கு
சேர்ந்துள்ளனர். அதை தொடர்ந்து தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
7.5 சதவீத இட
ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்
அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் தொழிற்கல்வி
படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட
மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார். ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில்
கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை
பெற்று வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரித்து உள்ளதை தெளிவாக காண முடிகிறது.
0 Response to "தொழிற் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு – சட்ட மசோதா தாக்கல்!"
Post a Comment