தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்? – அதிருப்தியில் குடும்ப தலைவிகள்!


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத உரிமைத்தொகை:
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை
தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான திட்டங்கள் பலவற்றையும் அரசு
அறிவித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப
தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த
திட்டத்திற்கான அறிவிப்புகள் பற்றி பல தரப்புகளில் இருந்தும் எதிர்பார்ப்புகள்
உள்ளது.
மேலும், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் பெயர் முதன்மையாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும் என்று பல ஆயிரக்கணக்கான மக்கள் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் பெயரை மாற்றுவதர்க்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது போன்று குடும்ப தலைவியின் பெயரை மற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு பல முறை அறிவித்து விட்டது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக தகுதியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் அரசின் உரிமைத்தொகை கிடைக்கும் என்று
எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு
மக்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. இது குறித்து, உரிமைத்தொகை ஏழைக்களுக்கான திட்டம் என்றும் வல்லுநர்களுடன் ஆலோசித்து
தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாகவம், தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் குடும்பத் தலைவிகள்
அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று குடும்ப தலைவிகள் கருதுகின்றனர்.
அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அரசு தரப்பு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
0 Response to "தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்? – அதிருப்தியில் குடும்ப தலைவிகள்!"
Post a Comment