
அமெரிக்காவை சேர்ந்த எகுவிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை
சென்னையில் திறந்துள்ளது. இதன் மூலமாக புதிதாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகுவிட்டி சொல்யூஷன்ஸ்:
சென்னையில் அமெரிக்காவை சேர்ந்த எகுவிட்டி சொல்யூஷன்ஸ் தனது புதிய
அலுவலகத்தை திறந்துள்ளது. சென்னையில் உள்ள டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்நிறுவனத்தின் புதிய அலுவலகம்
திறக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது இணையத் தொடர்பு வசதி மூலம் எழுத்துப் பணி
மற்றும் மொழி மாற்ற சேவைப் பணிகள் (Virtual Scribing), மருத்துவ ஆவணங்களைப் படியெடுத்தல், அவற்றைப் புதிதாக உருவாக்குதல் (Medical Transcription) மற்றும் மருத்துவக் குறியீடு எழுதும் பணி (Medical Coding
Services) போன்ற பணிகளை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தை விரிவுபடுத்த முதற்கட்ட நடவடிக்கையாக சென்னையில்
அமைக்கப்பட்டுள்ளது என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கஷ்யப் ஜோஷி
தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் மூலமாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 200 பேர் பணியமர்த்தப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் எண்ணிக்கை அதிகமாக உயர்த்தப்பட்டு 1000 பேர் செயல்படும் அலுவலமாக மாற்றப்படும் என அவர் தெரிவித்தார். மருத்துவம், சுகாதாரம் சார்ந்த சேவைப் பணிக்கான சந்தை ரூ.1.20 லட்சம் கோடி அளவுக்கு விரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள திறன் மிகு பணியாளர்களை தங்கள் நிறுவனம்
பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல்
அதிகமாக இருந்தாலும் நிறுவனத்தின் சேவை பணிகள் அதிகமாக இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார். இத்துறையில் 45 ஆண்டு அனுபவம் உள்ள எகுவிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா
மட்டுமின்றி இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து
உள்ளிட்ட நாடுகளில் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும்
இந்த நிறுவனத்தில் 7 ஆயிரத்துக்கு
அதிகமானோர் பணி செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "சென்னையில் புதிதாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – எகுவிட்டி சொல்யூஷன்ஸ் துவக்கம்!"
Post a Comment