கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை (Pdf Download ) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

Trending

Breaking News
Loading...

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை (Pdf Download ) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை (Pdf Download ) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

  🔵 White Paper on TN Finance LIVE: தமிழக சட்டசபை ஒப்புதல் இல்லாமல் ரூ1 லட்சம் கோடி வீண் செலவு- பிடிஆர்.


     _சென்னை: தமிழக சட்டசபை ஒப்புதல் இல்லாமல் அதிமுக ஆட்சியில் ரூ1 லட்சம் கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்._



 *🌎💢♨️சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.*✳️✳️


 *🌎💢♨️சென்னை: தமிழகத்தின் வருமானம் அதிக அளவில் சரிந்துவிட்டது என்று நிதிமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழகத்தின் வருமானம் குறைந்து செலவு அதிகரித்துள்ளதை தற்போது குறிப்பிட்டு ஆக வேண்டும். மேலும் 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார*✳️✳️


*🌎💢♨️சென்னை: தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்*✳️✳️.


💢♨️சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் ஆக ஒன்றிய அரசு தரவேண்டியது ரூ.20,033 கோடி என அவர் தெரிவித்துள்ளார்*✳️✳️

 *கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.*


நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.   120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.


மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:-


* ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்; வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம்


* உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


* அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது?  அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது


* சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.


* வாழ்வதற்கு சிறந்த இடமாக சொல்லப்படும் சுவீடன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகள் 30 சதவீத வரியை விதிக்கிறது.


*  2019 - 20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது.


* பண மதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டது.


* பொறுப்பான அரசு என்பது வளர்ச்சி, சமூக நீதிக்கு உதவ வேண்டும்.


* உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும்.


 * பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம்


* பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கப்படுகிறது.


* கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப தலைக்கு ரூ.50,000 முறைகேடு என உள்ளது.


* வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.


* மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.


* குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது. 


* ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு. 


* இந்த மோசமான நிதி நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாண்டி வரும்.அரசியலில் சக்தி, மேலாண்மையில் திறமை ஆகிய இரண்டும் சரியான அரசாங்கத்தை வழிநடத்தும். நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது; எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம். 


*வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும். தி.மு.க. அரசு  மக்களுடன் இணைந்து செயல்படும்.


* குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள், ஆனால் அதில் நன்மை தான் உள்ளது.


* தமிழ்நாடு பணக்கார மாநிலம்; இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன என கூறினார்.


வெள்ளை அறிக்கையில் சொல்லப்பட்ட பல விஷயங்களைப் பாக்கறப்போ, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டு வரி இதெல்லாம் கணிசமா உயர வாய்ப்பிருக்குன்னு தெரியுது. 


கூடுதல் வரிகளையும் கட்டணங்களையும் செலுத்த தயாராகுங்க மக்களே. அதான் சொல்லிட்டாரே 0% வரியில்லா பட்ஜெட் சாத்தியமே இல்லேன்னு. 


வெள்ளை அறிக்கையை, பட்ஜெட் தாக்கல் செய்யறதுக்கு முன்னாடி விட்டதுக்கான நோக்கமே எல்லா கட்டணங்களையும் வரிகளையும் விரைவில் உயர்த்தப்போறோம்கிற எச்சரிக்கை மணி அடிக்கறதுக்குதான். 


எரிபொருள் மீதான விலை குறைப்பு, இல்லத்தரசி களுக்கான  மாதாந்திர ஊக்கத்தொகை அறிவிப்பு இவை எல்லாம் நிதிப்பற்றாக் குறை என காரணம் காட்டி விரைவில் வாபஸ் பெறப்படும்.



தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

0 Response to "கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை (Pdf Download ) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel